எவ்வாறு சிறுநீர்த் தொற்றினை குணமாக்கலாம்? | How to cure Urinary Tract Infection?

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிறுநீர்த் தொற்றினை (Urinary Tract Infection) குணமாக்க வழிகள்

சிறுநீர்த் தொகுதியில் உள்ள எந்தப் பகுதியிலும் நுண்கிருமியினால் (Bacteria) ஏற்படும் தொற்றானது சிறுநீர்ப் பாதைத் தொற்று (Urinary Tract Infection) என்று அழைக்கப்படும். இத் தொற்றானது எமது குடலினுள் (intestines) வாழும் ஈஸ்றெச்சியா கோலை (Escherichia coli) அல்லது இலகுவாகக் கூறின் ஈ. கோலை (E. coli) என்ற பக்றீரியாவாகும். இக் கிருமியானது ஏதொரு வகையாக சிறுநீர்த் தொகுதிப் (Urinary System) பகுதியினுள் உள் செல்லுமிடத்து இந்த நோய்த் தொற்று உண்டாகும், குறிப்பாக சிறுநீர்ப்பையையும் (Bladder), சிறுநீர்க் குழாயினையும் (Urethra) இன்னமும் மேல் நோக்கியுள்ள குழாயையும் (Ureters), சிறுநீரகங்களையும் (Kidneys) தாக்கும்.

இந் நோயானது முக்கியமாக ஆண்களை விடப் பெண்களைத்தான் தாக்கும். ஏனென்றால், ஆண்களின் சிறுநீர்க் குழாயை (Urethra) விட பெண்களின் சிறுநீர்க் குழாயானது (Urethra) சிறிதாக உள்ளதனால் இந் நோய்க்கிருமியானது உள்ளே செல்வதற்கு இலகுவாக இருக்கும்.

இவ்வாறு உருவாகும் இந் நோயானது மிகவும் அவஸ்த்தையினை நோயாளிக்குக் கொடுக்கும். அந் நோயின் அறிகுறிகளாவன, தாங்க முடியாத எரிவினை சிறுநீர் கழிக்கும் போது கொடுக்கும், சிறுநீரினை அடிக்கடி போகச் செய்யும், ஆனால், சிறுநீர் கொஞ்சமாகத்தான் போகும். அடிவயிறு நோவினைக் கொடுக்கும், சிறுநீர் மணமாகவும் (smelly), கலங்கலாகவும் (Cloudy) இருக்கும்.

இவ்வாறு சிறுநீர்த் தொற்று ஏற்படின், வைத்தியரின் உதவியினை நாடும் முன்பு, உடனடியாக இயலுமான வரை தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதனால் சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டிவரும். நோயின் ஆரம்பத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும், இப்போது சிறுநீர் கழிப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பதனை நீங்களே உணருவீர்கள்.

நீர் அருந்துவதுடன் நின்று விடாது, கிரான்பெறி ஜூஸினையும் (cranberry juice) குடிக்கலாம். இந்த ஜூஸானது அடிக்கடி வரும் சிறுநீர் தொற்றினை (Recurrent Urinary Tract Infection) தடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். கிரான்பெறி பழங்கள் முக்கியமாக ஈ. கோலை பக்கறீரியா பெருகுவதனை அதாவது சிறுநீர்த் தொகுதியில் ஒட்டிக் கொள்வதனைத் தடுக்கக்கூடிய புறோஅந்தோசயனிடின்களைக் (proanthocyanidins) கொண்டுள்ளது. அதற்காக கிரான்பெறி ஜூஸ்தான் இதற்கான திறமான மருந்து என்று நினைக்கக்கூடாது.

நான் எனது அனுபவத்தில் குறிப்பிக்கூடியவாறு கிரான்பெறி ஜீஸினைக் அதிகமாகக் குடிக்காமல் 200 மி.லீ. காலையும், மாலையும் குடிக்கையில், மருந்துகள் இல்லாமலே முற்றாகக் குணமாகிவிட்டதையும் இங்கு சந்தோஷமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். அதற்காக, அதிகமாகக் குடித்தால் இந்த ஜூஸிலிலுள்ள குளுக்கோசின் அளவு இரத்தில் கூடுகின்றது என்பதனால் இந்த ஜூஸினை குடிக்காமல் இருக்க வேண்டாம்.

இவ்வாறு குணமாகாமல் விட்டால் அல்லது உங்களுக்கு வைத்திய அறிவுரை கேட்க வேண்டுமென்று விரும்பினால் வைத்திய உதவியினை நாடுவதில் தப்பில்லை. அத்துடன் சிறுநீர் பரிசோதனையினைச் செய்வதுடன் மருந்துகள் எடுத்து குணமாக்கவும் வேண்டும். இவ்வாறு குணமாக விட்டால், சிறுநீர் தொற்று மற்ற சிறுநீர் தொகுதிகளுக்கும் பரவி மிகவும் கடுமையான நோய் விளைவுகளை உருவாக்கும்.

எனவே, சாதாரணமாக நாங்கள் எமது வாழ்க்கையில் தண்ணீர் ஆகாரத்தினை நாளாந்த தேவைக்குரிய அளவினை (2 லீட்டர்) தவறாமல் குடிக்க வேண்டும். எமது உடலானது எமது தேவையினை அப்பப்போது சுட்டிக் காட்டும். அவ்வாறு சுட்டிக் காட்டுகையில் நாம் உடனே அதற்கு செவிசாய்க்க வேண்டும். எமது உடலை நன்றாக கவனிப்பதுதான் வாழ்க்கையில் மிக முக்கியம்.

How to cure Urinary Tract Infection?

Urinary Tract Infection (UTI) is an infection that occurs in any part of the urinary system, which includes the kidneys, ureters, bladder, and urethra. Most UTIs involve the lower urinary tract—the bladder and the urethra.

UTIs are typically caused by bacteria, most commonly Escherichia coli (E. coli), which normally live in the intestines. Symptoms of a UTI can include a strong, persistent urge to urinate, a burning sensation during urination, cloudy or strong-smelling urine, and pelvic pain, particularly in women.

UTIs are more common in women than men, due to the shorter length of the female urethra, which makes it easier for bacteria to enter the bladder. Treatment usually involves antibiotics, and it's important to address the infection promptly to prevent complications such as kidney infections. Drinking plenty of fluids and practicing good hygiene can help reduce the risk of developing a UTI.

Drinking cranberry juice is a popular home remedy for preventing and managing urinary tract infections (UTIs). Cranberries contain compounds called proanthocyanidins, which may help prevent bacteria, particularly E. coli, from adhering to the walls of the urinary tract, reducing the likelihood of infection. While some studies suggest that cranberry juice can lower the risk of recurrent UTIs, it's not a definitive cure and shouldn't replace medical treatment. Cranberry juice is most effective as a preventive measure rather than as a treatment once an infection is established. Always consult a healthcare provider for proper diagnosis and treatment of UTIs.

வாழ்க வளமுடன் - Live prosperously